பாகிஸ்தானுக்கு எதிராக அவுஸ்திரேலியா ஆக்ரோஷம்.

பாகிஸ்தானுக்கு எதிராக அவுஸ்திரேலியா ஆக்ரோஷம்.

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 18 ஆவது போட்டி இந்தியா, பெங்களுர் சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி அதிரடியான ஆரம்பம் ஒன்றை பெற்று பலமான நிலைக்கு சென்றது. டேவிட் வோர்னர், மிற்செல் மார்ஷ் இருவரும் சதங்களை பூர்த்தி செய்தனர். ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 33.5 ஓவர்களில் 259 ஓட்டங்கள். இதற்கு பிறகு அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்டம் தொடர்பில் பேசவா வேண்டும். டேவிட் வோர்னர் 163 ஓட்டங்கள். அணி 325 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டமிழந்தார். மார்ஷ் ஆட்டமிழந்ததும் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்தன. இருப்பினும் ஓட்டங்கள் உயர்ந்து சென்றன. ஆரம்பத்தில் வோர்னர் 10 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் அவரின் மிக இலகுவான பிடி நழுவவிட்டது பாகிஸ்தானின் இந்த மோசமான பின்னடைவுக்கு காரணமாக அமைந்தது.

ஷஹீன் ஷா அப்ரிடி அவுஸ்திரேலியா அணியின் விக்கெட்களை தகர்த்து ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்த உதவினார்.

அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 367 ஓட்டங்களை பெற்றுள்ளது. இந்த இலக்கை பாகிஸ்தான் அணி துரதியடிப்பது இலகுவானதல்ல. பந்துவீச்சில் ஷஹின் ஷா அப்ரிடி இறுக்கமாக பந்துவீசி 5 விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டார்.

இரண்டு பலமான அணிகள் மோதும் இந்தப் போட்டி விறு விறுப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. அரை இறுதிப் போட்டி நகர இரு அணிகளுக்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமாக அமைகிறது. ஆனாலும் போட்டி அவுஸ்திரேலியா பக்கமாக சென்றுள்ளது.

1999 ஆண்டின் உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டி அணிகள் இரண்டும் இதுவரை 10 தடவைகள் உலகக்கிண்ண தொடரில் சந்தித்துள்ளன. இவற்றில் 6 போட்டிகளில் அவுஸ்திரேலியா அணியும், 4 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
டேவிட் வோர்னர்பிடி – ஷதாப் கான்ஹரிஸ் ரவூப்163124149
மிற்செல் மார்ஷ்பிடி – உசாமா மிர்ஷஹீன் அப்ரிடி121108109
க்ளன் மக்ஸ்வெல்பிடி – பபர் அசாம்ஷஹீன் அப்ரிடி000100
ஸ்டீபன் ஸ்மித்பிடி – உசாமா மிர்உசாமா மிர்070900
மார்க்ஸ் ஸ்ரோய்னிஸ்L.B.Wஷஹீன் அப்ரிடி212411
ஜோஷ் இங்லிஷ்பிடி – முகமட் ரிஸ்வான்ஹரிஸ் ரவூப்130920
மார்னஸ் லபுஷேன்பிடி – ஷதாப் கான்ஹரிஸ் ரவூப்081210
பட் கம்மின்ஸ்   0608 
மிட்செல் ஸ்டார்க்பிடி – சவுத் ஷகீல்ஷஹீன் அப்ரிடி020300
ஜோஸ் ஹெஸல்வூட்பிடி – முகமட் ரிஸ்வான்ஷஹீன் அப்ரிடி000100
அடம் ஷம்பா   0101 
உதிரிகள்  25   
ஓவர்  50விக்கெட்  09மொத்தம்367   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஷஹீன் அப்ரிடி1001 5405 
ஹசன் அலி08005700
இப்திகார் அகமட்08003700
ஹரிஸ் ரவூப்08008303
உசாமா மிர்09008201
மொஹமட் நவாஸ்07004300

அணி விபரம்

பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், மொஹமட் நவாஸ், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, உசாமா மிர்

அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) ,டேவிட் வோர்னர், ஸ்டீபன் ஸ்மித்., மார்கஸ் லபுஷேன், மிற்செல் மார்ஷ், க்ளன் மக்ஸ்வெல், மார்க்ஸ் ஸ்ரோய்னிஸ், ஜோஷ் இங்கிலிஸ் ,மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா

Social Share

Leave a Reply