அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 18 ஆவது போட்டி இந்தியா, பெங்களுர் சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி அதிரடியான ஆரம்பம் ஒன்றை பெற்று பலமான நிலைக்கு சென்றது. டேவிட் வோர்னர், மிற்செல் மார்ஷ் இருவரும் சதங்களை பூர்த்தி செய்தனர். ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 33.5 ஓவர்களில் 259 ஓட்டங்கள். இதற்கு பிறகு அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்டம் தொடர்பில் பேசவா வேண்டும். டேவிட் வோர்னர் 163 ஓட்டங்கள். அணி 325 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டமிழந்தார். மார்ஷ் ஆட்டமிழந்ததும் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்தன. இருப்பினும் ஓட்டங்கள் உயர்ந்து சென்றன. ஆரம்பத்தில் வோர்னர் 10 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் அவரின் மிக இலகுவான பிடி நழுவவிட்டது பாகிஸ்தானின் இந்த மோசமான பின்னடைவுக்கு காரணமாக அமைந்தது.
ஷஹீன் ஷா அப்ரிடி அவுஸ்திரேலியா அணியின் விக்கெட்களை தகர்த்து ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்த உதவினார்.
அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 367 ஓட்டங்களை பெற்றுள்ளது. இந்த இலக்கை பாகிஸ்தான் அணி துரதியடிப்பது இலகுவானதல்ல. பந்துவீச்சில் ஷஹின் ஷா அப்ரிடி இறுக்கமாக பந்துவீசி 5 விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டார்.
இரண்டு பலமான அணிகள் மோதும் இந்தப் போட்டி விறு விறுப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. அரை இறுதிப் போட்டி நகர இரு அணிகளுக்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமாக அமைகிறது. ஆனாலும் போட்டி அவுஸ்திரேலியா பக்கமாக சென்றுள்ளது.
1999 ஆண்டின் உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டி அணிகள் இரண்டும் இதுவரை 10 தடவைகள் உலகக்கிண்ண தொடரில் சந்தித்துள்ளன. இவற்றில் 6 போட்டிகளில் அவுஸ்திரேலியா அணியும், 4 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
டேவிட் வோர்னர் | பிடி – ஷதாப் கான் | ஹரிஸ் ரவூப் | 163 | 124 | 14 | 9 |
மிற்செல் மார்ஷ் | பிடி – உசாமா மிர் | ஷஹீன் அப்ரிடி | 121 | 108 | 10 | 9 |
க்ளன் மக்ஸ்வெல் | பிடி – பபர் அசாம் | ஷஹீன் அப்ரிடி | 00 | 01 | 0 | 0 |
ஸ்டீபன் ஸ்மித் | பிடி – உசாமா மிர் | உசாமா மிர் | 07 | 09 | 0 | 0 |
மார்க்ஸ் ஸ்ரோய்னிஸ் | L.B.W | ஷஹீன் அப்ரிடி | 21 | 24 | 1 | 1 |
ஜோஷ் இங்லிஷ் | பிடி – முகமட் ரிஸ்வான் | ஹரிஸ் ரவூப் | 13 | 09 | 2 | 0 |
மார்னஸ் லபுஷேன் | பிடி – ஷதாப் கான் | ஹரிஸ் ரவூப் | 08 | 12 | 1 | 0 |
பட் கம்மின்ஸ் | 06 | 08 | 0 | 0 | ||
மிட்செல் ஸ்டார்க் | பிடி – சவுத் ஷகீல் | ஷஹீன் அப்ரிடி | 02 | 03 | 0 | 0 |
ஜோஸ் ஹெஸல்வூட் | பிடி – முகமட் ரிஸ்வான் | ஷஹீன் அப்ரிடி | 00 | 01 | 0 | 0 |
அடம் ஷம்பா | 01 | 01 | 0 | 0 | ||
உதிரிகள் | 25 | |||||
ஓவர் 50 | விக்கெட் 09 | மொத்தம் | 367 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
ஷஹீன் அப்ரிடி | 10 | 01 | 54 | 05 |
ஹசன் அலி | 08 | 00 | 57 | 00 |
இப்திகார் அகமட் | 08 | 00 | 37 | 00 |
ஹரிஸ் ரவூப் | 08 | 00 | 83 | 03 |
உசாமா மிர் | 09 | 00 | 82 | 01 |
மொஹமட் நவாஸ் | 07 | 00 | 43 | 00 |
அணி விபரம்
பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், மொஹமட் நவாஸ், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, உசாமா மிர்
அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) ,டேவிட் வோர்னர், ஸ்டீபன் ஸ்மித்., மார்கஸ் லபுஷேன், மிற்செல் மார்ஷ், க்ளன் மக்ஸ்வெல், மார்க்ஸ் ஸ்ரோய்னிஸ், ஜோஷ் இங்கிலிஸ் ,மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா