வடக்கு ,கிழக்கில் இன்று (20.10) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா, அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு ராஜினாமா செய்து நாட்டைவிட்டு, வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு இன்றைய தினம் (20/10) வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன்
தனியார் போக்குவரத்துச் சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன.
எனினும் அரச போக்குவரத்துச் சேவைகள் இயல்பு நிலையில் காணப்பட்டதோடு பாடசாலைகள்,அரச அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் வழமை போலவே இயங்கின.
மன்னார் நீதிமன்றத்தின்செயற்பாடுகள் வழமை போல் இடம் பெற்ற போதும் சட்டத்தரணிகள் மன்றுக்குச் செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
மன்னார் நகரப்பகுதியில் உள்ள அனைத்து வரத்தகர்களும் ஹர்த்தாலுக்கு தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.