குருநாகல் நகரில் புவனேகபாகு அரசவையை இடித்து அழித்தமை தொடர்பிலான வழக்கில் முன்னாள் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ உள்ளிட்ட ஐவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையை அடுத்து இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண, நகர ஆணையாளர் பிரதீப் நிஷாந்த திலகரத்ன, நகர பொறியியலாளர் சமிந்த பண்டார, பதில் அத்தியட்சகர் இலாலுடின் சுல்பிகார் மற்றும் பெக்கோ இயந்திரத்தினை இயக்கிய லக்ஷ்மன் பிரியந்த ஆகிய ஐவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் நகர் மத்தியில் அமைந்திருந்த இந்த தொன்மைவாய்ந்த கட்டிடம், இரண்டாவது புவனேகபாகு மன்னரால் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படுகின்றது.
இவ்வாறான தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடத்தை இடித்த குற்றச்சாட்டில் குறித்த ஐவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.