இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 2 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 208,253 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பெப்ரவரி மாதத்தில் இந்தியாவிலிருந்து மாத்திரம் 34 ஆயிரத்து 399 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன் ரஷ்யாவிலிருந்து 31,159 சுற்றுலாப் பயணிகளும், இங்கிலாந்தில் இருந்து 16,665 பேரும், ஜெர்மனியில் இருந்து 13,593 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.