மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு..!

ரயில் தடம் புரள்வு காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த ரயிலொன்று உலப்பனை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது.

இந்நிலையில்; கொழும்பு கோட்டையிலிருந்து மலையக மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள் கம்பளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பதுளையிலிருந்து புறப்படும் ரயில்கள் நாவலப்பிட்டி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply