இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் நேற்று முன்தினம் (28) உயிரிழந்தார்.
சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல அனைத்து உதவிகளையும் வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, மறைந்த சாந்தனின் சகோதர் ,”இறுதியாக இந்த ஒன்றரை வருடமாகப் போராடியும் அண்ணனை என்னால் மீட்க முடியவில்லை.
அண்ணாவின் மரணச் செய்தியை அம்மாவிடம் சேர்ப்பதற்கு 2 நாட்களாவது எனக்குத் தேவைப்படுகின்றது.அதுவரை அம்மாவைத் தனிமையில் வைத்திருக்கின்றேன்.
என் தாயின் நிலை இனிமேலாவது எந்தத் தாய்க்கும் வராமலிருக்கட்டும்.” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.