வாகன இறக்குமதிக்கு விரைவில் அனுமதி?  

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் ஆராய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் வெளிநாட்டு நாணயங்களின் கையிருப்பு அதிகரிப்புடன், தேவைக்கேற்ப வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது தெரிவித்துள்ளார். 

மேலும், சுற்றுலாத் துறைக்கு தேவையான 750 வேன்கள் மற்றும் 250 பஸ்களை  இறக்குமதி செய்ய அனுமதியளிக்க பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

Social Share

Leave a Reply