மலேசியாவில் இரு ஹெலிகப்டர்கள் நேருக்கு நேர் மோதல் – பலர் உயிரிழப்பு

மலேசியாவில் கடற்படை ஹெலிகப்டர்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்து இன்று காலை (23) இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரோயல் மலேசியன் நேவி கொண்டாட்ட நிகழ்வுக்கான ஒத்திகையின் போது இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

M503-3 கடல்சார் செயற்பாட்டு ஹெலிகப்டரில் (HOM) ஏழு பணியாளர்கள் இருந்ததாகவும், மற்றைய ஹெலிகப்டரான M502-6 இல் மூன்று பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply