சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் Playoffs தகுதிப் பெற்றுக்கொண்டது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக தடை பட்டமையினால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 15 புள்ளிகளுடன் Playoffs தகுதி பெற்றது.
ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி, ஹைதராபாத் மைதானத்தில் நேற்று(16.05) இரவு 7.30 நடைபெறவிருந்தது.
இருப்பினும் போட்டியின் ஆரம்பம் முதல் பெய்த மழைக் காரணமாக, இந்த போட்டி கைவிடப்பட்டது.
இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்ட நிலையில், ஹைதராபாத் அணி 15 புள்ளிகளுடன் தரவரிசையில் தொடர்ந்தும் மூன்றாமிடத்தில் உள்ளதுடன், மூன்றாவது Playoffs தகுதிப் பெற்றுக்கொண்டது.
மேலும், இன்றைய போட்டி கைவிடப்பட்டமையினால் 12 புள்ளிகளுடன் தரவரிசையில் 8ம் இடத்திலுள்ள குஜராத் அணிக்கு 2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 14 போட்டிகளும் நிறைவடைந்துள்ளன.
ஐபிஎல் தொடரில் 66 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் Playoffs சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
Playoffs சுற்றில் ஒரு இடம் மாத்திரம் மீதமுள்ள நிலையில், எதிர்வரும் 18ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு Playoffs சுற்றுக்குள் நுழைவதற்கு அதிகபட்ச வாய்ப்பு காணப்படுகின்றது.