மதுபானக் கம்பனிகள் இதுவரை அனுபவித்து வந்த அரசியல் தேனிலவை முடிவுக்குக் கொண்டு வருவோம்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
மக்களை குறிவைத்து நேரடி வரிகள், மறைமுக வரிகளை அரசாங்கம் விதித்து வருகிறது. இதன் காரணமாக அரச வருவாய் அதிகரித்து, பொருட்களின் விலை அதிகரித்து, மக்களின் நெருக்குதல் அதிகரித்துள்ள நிலையில், மதுபான நிறுவனங்கள் முறையாக வரி செலுத்த தவறிவிட்டன. மதுபான நிறுவனங்கள் இதுவரை 700 கோடி வரி செலுத்த தவறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 194 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் களுத்துறை, பாணந்துறை அலவியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (20) இடம்பெற்றது.
“மதுபான நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ள நேரத்தில், மக்களை குறிவைத்து அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மதுபான நிறுவனங்களின் பணமே இதற்கு காரணம். இந்நிறுவனங்களின் உரிமத்தை சில நாட்களுக்கு இரத்து செய்தாலும், மக்களை ஏமாற்றி, குறைந்த தொகையை வரியாக அறவிட்டு மீண்டும் அந்த உரிமப் பத்திரங்களை வழங்குகின்றனர்.
மதுபானக் கம்பனிகள் இதுவரை அனுபவித்து வந்த அரசியல் தேனிலவை முடிவுக்குக் கொண்டு வந்து, இந்நாட்டின் பொதுச் சேவைக்குத் தேவையான அரச வருமானத்தை இந்த நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்
🟩 தரம் குறைந்த மருந்துகள் கொள்வனவால் நாடு 6000 மில்லியனை இழந்துள்ளது.
பல்வேறு கணக்காய்வு அறிக்கைகளின் பிரகாரம், இலங்கையில் மருந்து, சத்திரசிகிச்சை மற்றும் ஆய்வகத் துறைகளில் தரம் குறைந்த மருந்துகள், பாவனைக்கு உதவாத மருந்துகள் மற்றும் சந்தைக்கு விநியோகிக்க முடியாமல் இருக்கும் மருந்துகளுக்கு 6000 மில்லியன் அதாவது 60000 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் நிதியை சூறையாடி, சட்டவிரோதமான முறையில் மருந்துகளை இலங்கை சந்தைக்கு வெளியிட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, நஷ்டஈடு பெற்றுத்தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
🟩ஏன் நம்மால் மழைநீரை முறையாக கையாள முடியாது?
பல நாட்களாக தொடர்ச்சியாக மழை பொழிந்து வருகிறது. இந்த விலைமதிப்பற்ற நீர் வளம் வீணாக கடலில் கலக்கிறது. மழைக்காலத்தில் வெள்ளமும், மழை இல்லாத காலங்களில் வறட்சியும் ஏற்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். நாட்டில் உள்ள இந்த விலைமதிப்பற்ற நீர் வளத்தைப் பாதுகாத்து வறண்ட பகுதிக்கு அதனை வழங்குவதற்கு வழி இருக்குமாக இருந்தால் அது பயனுள்ளதாக அமையும். இதற்கு தேசிய திட்டமிடல் ஒன்று தேவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டடினார்.
🟩 எந்த பாகுபாடும் இல்லாமல் காஸா மக்களுக்காக நாம் முன்நிற்க வேண்டும்.
காஸா பகுதியில் நடந்த அழிவு குறித்து பாராளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயும் நான் குரல் கொடுத்தேன். இந்த இரு நாடுகளும் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம், தீவிரவாதிகளுடன் இணைந்து பாலஸ்தீனம் முழுவதையும் தரைமட்டமாக்கும் அரச பயங்கரவாதக் கொள்கையை செயல்படுத்தி வருகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
நான் சொல்ல வேண்டியதை நேரடியாக முகத்திலயே சொல்விடுவேன். இதை வெளிப்படையாக பேசும் போது இந்த படுகொலையை தடுத்து நிறுத்த முடியும். சாத்தியமான விளைவை ஏற்படுத்தும் தலையீடுகளை இதற்கு செலுத்த வேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.