நீர்ப்பாசன திணைக்களத்தின் ஊழியர் மீது தாக்குதல்

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் அமைந்துள்ள மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் மண் பரிசோதனை ஆய்வுக்கூடத்தில் கடமை புரியும் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று(23.07) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் பள்ளமடு அலுவலகத்தில் கடமை புரியும் ஒருவர், மன்னார் திருக்கேதீஸ்வர மண் பரிசோதனை ஆய்வு கூடத்துக்கு வந்து அங்கு கடமை புரியும் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். 

தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் தற்பொழுது மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஒரே திணைக்களத்தில் சேவை புரியும் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலவிய கருத்து முரண்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிசார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்.

Social Share

Leave a Reply