டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40,494 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயினால் மேல் மாகாணத்தில் வசிப்பவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, 17,159 பேர் மேல்மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும்
தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வாநிலை காரணமாக டெங்கு நோய் மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply