மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அங்குத் தங்கியுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அந்நாடுகளில் உள்ள தூதரகங்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தாக்குதல்களினால் இலங்கையர் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு வர விரும்பும் மக்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு தூதரகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இலங்கையர்கள் எவரும் நாடு திரும்புவதற்குக் கோரவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.