முன்னாள் சபாநாயகர் அசோக ரனவல வைத்தியர் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சமூக வலைத்தள நிகழ்ச்சியில் கூறியது “வினோதமான திருப்பம்” என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்தோடு அவர் போதியளவு அறிவின்றி இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாகவும், இது மக்களை திசை திரும்புவதாக அமைவதாகவும் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளதாக மேலும் அந்த ஊடகம் கூறியுள்ளது .
அசோக ரனவல தானாக கலாநிதி பட்டத்தை வைத்துகொள்ள்வில்லை எனவும், மக்களால் அது உருவாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அத்தோடு அவரது குடும்பம் வைத்தியதுறையை சேர்ந்தவர்கள் எனவும், 1989 ஆம் ஆண்டு ஜப்பான் அசோக ரனவல சென்றதாகவும், அதன் போது அவர் ,மருத்துவம் பயின்றதாகவும் இளங்குமரன் கூறியிருந்தார். பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவியை பெற கலாநிதி பட்டம் தேவையில்லை என்றும் மேலும் தனது கருத்தை கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் போதியளவு அறிவின்றி இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாகவும், இது மக்களை திசை திருப்புவதாக அமைவதாகவும் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளதாக குறித்த ஊடகம் ஊடகம் தனது செய்தில் தெரிவித்துள்ளது.