வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சத்தியலிங்கம் விஜயம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சத்தியலிங்கம் விஜயம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர், வைத்தியர் ப.சத்தியலிங்கம் அவர்கள் நேற்று (03.02) விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து வைத்தியசாலையின் தேவைப்பாடுகள், பிரச்சினைகள் மற்றும் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவேண்டிய எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மேற்படி கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.N.C.D.ஆரியரத்ன, வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply