
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று(23.02) சம்பியன்ஸ் கிண்ணத்தின் 5 ஆவது போட்டியாக துபாய் சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
2017 ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளும் மோதின. இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியா அணியை தோற்கடித்து சம்பியன்ஸ் கிண்ணத்தை முதல் தடவை கிண்ணத்தை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியுடனான போட்டியில் 60 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. இந்தியா அணி பங்களாதேஷ் அணியை 6 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் இந்தியா அணி 2 ஆம் இடத்திலும், பாகிஸ்தான் அணி இறுதி இடத்திலும் காணப்படுகின்றனர்.
அணி விபரம்
இந்தியா அணி :- ரோஹித் ஷர்மா(தலைவர்), ஷுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், KL ராகுல், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திரா ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், மொஹமட் ஷமி, ஹர்ஷித் ராணா
பாகிஸ்தான் அணி :- இமாம் உல் ஹக், பாபர் அசாம், மொஹமட் ரிஸ்வான்(தலைவர்), பகர் சமான், சல்மான் அகா, தய்யப் தஹிர், குஷ்தில் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ரவுப், அப்ரர் அஹமட்