வவுனியாவில் விபத்து – தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்

வவுனியாவின் பூந்தோட்டம் பகுதியில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும் காரும் தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply