ஒமிக்ரொன் குறித்து சுகாதார பிரிவின் எச்சரிக்கை

ஒமிக்ரொன் பிறழ்வின் வேகமான பரவல் காரணமாக பூஸ்டர் தடுப்பூசியை விரைந்து பெற்றுக் கொள்ளுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ​ஹேரத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த புதிய பிறழ்வானது ஆபத்து மிக்கதல்ல என்ற நிலைப்பாடு பலரது மத்தியில் காணப்படுகின்ற நிலையில், பலவீனமான ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று ஆபத்தை விளைவிக்கும் என அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமானதாகும் என அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

ஒமிக்ரொன் குறித்து சுகாதார பிரிவின் எச்சரிக்கை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version