மனித உரிமை மீறல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான வர்த்தமானி மீறப்பட்டமைக்கு எதிராக மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக அபிவிருத்தி நிருவகம் உள்ளிட்ட 10 சிவில் சமுக அமைப்புகள் இணைந்து இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 5 பிரதேச செயலகங்களையும் காலி மாவட்டத்தில் புதிதாக 2 பிரதேச செயலகங்களையும் உருவாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த அரசாங்கத்தில் வெளியிடப்பட்டது.

எனினும் அண்மையில் நுவரெலியா மாவட்டத்தில் ஒரு உப பிரதேச செயலகம் மாத்திரம் திறந்து வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் மக்கள் உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version