மின்தடை மறுஅறிவித்தல் வரை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. தேவையான அளவு எரிபொருள், மின் உற்பத்தி நிலையங்களுக்கு கிடைத்துள்ளமையினால் மின் தடை செய்யப்படவேண்டிய நிலை இல்லை என பொது சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின் தடை தொடர்பாக முழுமையாக ஆராய்ந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றின் மூலமாக பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சசைகள் இந்த முடிவில் தாக்கம் செலுத்தியுள்ள அதேவேளை, 200 மெகா வோட்ஸ் மின்சாரம் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி இயக்கப்பட்டுள்ளமையினால் கிடைக்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
.