யாழில் மீனவர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம், வடமராட்சியில் மீனவர்கள் வீதிமறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை காணமல் போன மீனவர்கள் இருவர் இன்று காலை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர்.
இருவரது சடலங்களும் வடமராட்சி பகுதியில் கரையொதுங்கியிருந்தன. இந்த நிலையில் குறித்த மரணங்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் தங்கள் படகுகளை வீதிகளுக்கு குறுக்காக நிறுத்தி வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“இந்தியனே! வாழவிடு, இலங்கை அரசே முடிவெடு” என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் இடம்பெறுகிறது. இந்தியன் இழுவை படகு, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு இலங்கை மீனவர்களின் உடமைகளையும், உயிர்களையும் அழித்தமையும் வன்மையாக கண்டிக்கிறோம்” என்ற வாசகங்களை தாங்கிய பதாதையினை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் காட்சி படுத்தியுள்ளனர்.

நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக வாகன போக்குவரத்துகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version