நிதியமைச்சர் பசில் ராஜ்பக்ச “திவிநெகும” வழக்கில் குற்றவாளியல்ல என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டுள்ளார் . இன்று காலை கொழும்பு உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2015 ஜனாதிபதி தேர்தலின் போது கிட்டத்தட்ட 3 கோடி ரூபா பெறுமதியான, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புகைப்படம் பொறிக்கப்பட்ட விளம்பரங்களை, திவிநெகும நிதியில் அச்சிட்டதாக குற்றம் சுமத்தி பசில் ராஜபக்ச, மற்றும் திவிநெகும பணிப்பாளர் கித்ஸ்ரீ ரட்நாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த வழக்கிலிருந்து தற்போதைய நிதியமைச்சர் மற்றும் கித்ஸ்ரீ ரட்நாயக்க ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.