IPL ஏலம் முதல் நாள் நிறைவு

2022 ஆம் ஆண்டு IPL கிரிக்கெட் தொடருக்கான ஏலம் இன்று ஆரம்பமாகி நடைபெற்றது. இன்று (12.02) 9.30 அளவில் ஏலம் நிறைவடைந்தது.

முதல் நாள் ஏலத்தில் 74 வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர். இவர்களில் 54 இந்திய வீரர்களும், 20 வெளிநாட்டு வீரர்களும் உள்ளடங்குகின்றனர். இஷன் கிஷன் கூடுதலான 15.25 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் வனிது ஹசரங்க, ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணியினால் வாங்கப்பட்டுளார். இலங்கை வீரர் ஒருவர் 10.75 கோடிக்கு வாங்கப்பட்டது இதுவே முதற் தடவையாகும்.

தீபக் சஹர் இரண்டாவது கூடுதலான விலையான 14 கோடி ரூபாவுக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளார்.

மூன்றாவது கூடுதலான விலையான 12.25 கோடி ரூபாய்க்கு ஷ்ரேயாஸ் ஐயர், கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியினால் வாங்கப்பட்டுளார்.

மேற்கிந்திய தீவு வீரர் நிக்லோஸ் பூரான் 10.75 கோடி ரூபாய்க்கு சன்ரைஸ் ஹைட்ராபாட் அணியினாலும், ஷர்டூல் தாகூர் 10.75 கோடி ரூபாய்க்கு டெல்லி கப்பிடல்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளார்கள்.

இதுவரையில் வாங்கப்பட்ட வீரர்கள் விபரம்

சென்னை சுப்பர் கிங்ஸ்

தீபக் சஹார் ₹14,00,00,000
அம்பாத்தி ராயுடு ₹ 6,75,00,000
டுவைன் பிராவோ ₹4,40,00,000
ரொபின் உத்தப்பா ₹2,00,00,000
K.M.ஆசிப் ₹20,00,000
டுஸார் தேசபந்தே ₹20,00,000

டெல்லி கபிட்டல்ஸ்

ஷர்டூல் தாகூர் ₹10,75,00,000
மிற்செல் மார்ஷ் ₹6,50,00,000
டேவிட் வோர்னர் ₹6,25,00,000
குல்தீப் யாதவ் ₹2,00,00,000
அஷ்வின் ஹெபர் ₹20,00,000
முஸ்டபைசுர் ரஹ்மான் ₹2,00,00,000
சப்ராஸ் கான் ₹20,00,000
கமலேஷ் நாகர்கொட்டி ₹1,10,00,000
ஷிரிகர் பரத் ₹2,00,00,000

குஜராத் டைட்டன்ஸ்

லூக்கி பெர்குசன் ₹10,00,00,000
மொஹமட் ஷமி ₹6,25,00,000
ஜேசன் ரோய் ₹2,00,00,000
அபினவ் சடரங்கனி ₹2,60,00,000
ராஹுல் தேவேதியா ₹9,00,00,000
நூர் அஹமட் ₹30,00,000
அவேஷ் கான் ₹10,00,00,000
அன்கிட் சிங் ₹50,00,000
ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் ₹3,00,00,000

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ்

ஷ்ரேயாஸ் ஐயர் ₹12,25,00,000
நிதிஸ் ரானா ₹8,00,00,000
பட் கமின்ஸ் ₹7,25,00,000
சிவம் மாவி ₹7,25,00,000
ஷெல்டொன் ஜாக்சொன் ₹60,00,000

லக்னோ சுப்பர் ஜியன்ட்

குர்னால் பாண்ட்யா ₹8,25,00,000
தீபக் கூடா ₹5,75,00,000
மானிஷ் பாண்டி ₹4,60,00,000
குயின்டன் டி கொக் ₹6,75,00,000
ஜேசன் ஹோல்டர் ₹8,75,00,000
மார்க்வூட் ₹7,50,00,000

மும்பை இன்டியன்ஸ்

இசன் கிஷன் ₹15,25,00,000
டெவலட் ப்ரேவிஸ் ₹3,00,00,000 (தென்னாபிரிக்கா 19 வயது கீழ் வீரர்)
பசில் தம்பி ₹30,00,000
முருகன் அஷ்வின் ₹1,60,00,000

பஞ்சாப் கிங்ஸ்

கஜிஸோ ரபாடா ₹9,25,00,000
ஷிகர் தவான் ₹8,25,00,000
ஜொனி பாஸ்டோவ் ₹6,75,00,000
ராஹுல் சஹார் ₹5,25,00,000
ஷாருக் கான் ₹9,00,00,000
ஹர்ப்ரீட் ப்ரார் ₹3,80,00,000
ப்ரப்சிம்ரன் சிங் ₹60,00,000
ஜிதேஷ் ஷர்மா ₹20,00,000
இஷான் போரெல் ₹25,00,000

ராஜஸ்தான் ரோயல்ஸ்

ரவிச்சந்திரன் அஷ்வின் ₹5,00,00,000
டேவ்டட் படிக்கல் ₹7,75,00,000
ஷிம்ரோன் ஹெட்மைர் ₹8,50,00,000
பிரசித் க்ரிஷ்ணா ₹10,00,00,000
ரென்ட் போல்ட் ₹8,00,00,000
யுஸ்வேந்த்ரா செஹால் ₹6,50,00,000
ரியான்பி பராக் ₹3,80,00,000
K.C கரியப்பா ₹30,00,000

ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர்

வனிது ஹசரங்க ₹10,75,00,000
டினேஷ் கார்த்திக் ₹5,50,00,000
ஹர்ஷால் பட்டேல் ₹10,75,00,000
பாப் டு பிளேஸிஸ் ₹7,00,00,000
ஜோஸ் ஹெசல்வுட் ₹7,75,00,000
ஷஹ்பாஷ் அஹமட் ₹2,40,00,000
அனுஜ் ரவட் ₹3,40,00,000
ஆகாஷ் டீப் ₹20,00,000

சன்ரைசஸ் ஹைட்ராபாட்

வொஷிங்டன் சுந்தர் ₹8,75,00,000
நிக்லோஸ் பூரான் 10,75,00,000
தங்கராசு நடராஜன் ₹4,00,00,000
புவனேஷ்வர் குமார் ₹4,20,00,000
ப்ரியம் கார்க் ₹20,00,000
ராகுல் திருப்பதி ₹8,50,00,000
அபிஷேக் ஷர்மா ₹6,50,00,000
கார்த்திக் தியாகி ₹4,00,00,000
ஜெகதீஷா சுசித் ₹20,00,000
ஷ்ரேயஸ் கோபால் ₹75,00,000

ஏலத்திற்கு விடப்படாத வீரர்கள் விபரம்

ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்:

விராட் கோலி (ரூ 15 கோடி), கிளென் மக்ஸ்வெல் (ரூ 11 கோடி) மொஹமட் சிராஜ் (ரூ 7 கோடி).

மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா (ரூ 16 கோடி), ஜஸ்பிரிட் பும்ரா (ரூ 12 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ 8 கோடி), கெய்ரோன் பொல்லார்ட் (ரூ 6 கோடி).

பஞ்சாப் கிங்ஸ்:

மயங்க் அகர்வால் (ரூ. 12 கோடி,, அர்ஷ்தீப் சிங் (ரூ. 4 கோடி).

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

கேன் வில்லியம்சன் (ரூ 14 கோடி), அப்துல் சமட் (ரூ 4 கோடி), உம்ரான் மாலிக் (ரூ 4 கோடி).

சென்னை சூப்பர் கிங்ஸ்: ,

ரவீந்திர ஜடேஜா (ரூ 16 கோடி), எம்எஸ் தோனி (ரூ 12 கோடி), மொயீன் அலி (ரூ 8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ 6 கோடி).

டெல்லி கப்பிடல்ஸ் :

ரிஷாப் பான்ட் (ரூ. 16 கோடி), அக்சர் படேல் (ரூ. 9 கோடி), பிருத்வி ஷா (ரூ. 7.5 கோடி), அன்ரிச் நோர்க்ஜியா (ரூ. 6.5 கோடி) .

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
அண்ட்ரே ரசல் (12 கோடி), வருண் சக்ரவர்த்தி (8 கோடி), வெங்கடேஷ் ஐயர் (8 கோடி), சுனில் நரைன் (6 கோடி)

ராஜஸ்தான் ரோயல்ஸ்:
சஞ்சு சாம்சன் (ரூ 14 கோடி), ஜோஸ் பட்லர் (ரூ 10 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ 4 கோடி).


IPL ஏலம் முதல் நாள் நிறைவு
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version