அபார திறமையை காட்டிய ஒமேகா லைன், வவுனியா தொழிலார்கள்

வவுனியா, ஒமேகா லைன் கார்மண்ட்ஸ் நிறுவனம் கடந்த 14 ஆம் திகதியன்று “திறமை திறனாய்வு (TALENT EXPLORA 2K22)” எனும் தலைப்பில் நடன, பாடல் போட்டிகளுக்கான மாபெரும் இறுதிப் போட்டியினை நடாத்தியிருந்தது. இறுதிப் போட்டியில் ஆறு நடன குழுக்களும், 5 பாடகிகளும் பங்குபற்றியிருந்தனர்.

இறுதிப் போட்டிக்கு முன்னதாக முதற் சுற்று போட்டிகள் நடைபெற்று அவற்றில் தகுதி பெற்ற பாடகிகளும், நடனக் குழுக்களும் இறுதிப் போட்டியில் பங்குபற்றியிருந்தார்கள்.

இந்த இறுதிப் போட்டி ஒரு ஆடை தொழிற்சாலைக்குள் நடைபெற்ற போட்டியா என்ற சந்தேகம் எழும் அளவிற்கு போட்டியலாளர்கள் கடுமையாக போராடியதோடு, மிகவும் சிறப்பாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இந்த போட்டிகளுக்கு நடுவர்களாக கடமையாற்றியவர்கள் அசந்தும் போகுமளவுக்கு தங்கள் திறைமைகளை வெளிக்காட்டியிருந்தனர். தங்களது பணிகளுக்கு மத்தியில் போட்டிகளுக்கு தயாராகுவது இலகுவானதல்ல.

பாடகிகள் தங்களது திறமைகளை வைத்துக் கொண்டு ஓரளவே சுயமாகவே தங்களை தயார் செய்யலாம். ஆனால் நடன குழுக்கள், நடனங்களை வடிவமைத்து, அதற்கான உடைகள், ஒப்பனைகளை தயார் செய்து பயிற்சிகளை செய்து ஆடுவது இலகுவானதல்ல. ஆனால் மிகவும இலாவகரமாக அவர்கள் செயற்பட்ட விதம் உண்மையிலேயே ஆச்சரியப்பட வைத்தது.

இந்த நிகழ்வின் நடுவர்களாக இயக்குனர்,நடிகர், நடன இயக்குனர் வினோத், நடன ஆசிரியை திருமதி சுஜிதா ஜெயாதாஸ், பாடகர் மனோஜ், டிரம்ஸ் வாத்திய கலைஞர் ஜோன்சன் மற்றும் வி மீடிய பணிப்பாளரும் அறிவிப்பாளருமான விமலச்சந்திரன் (விமல்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொழிலார்களை தனியே தொழிலுக்கு பாவிக்காமல் அவர்களது திறமைகளுக்கான களத்தினை ஒமேகா லைன் வவுனியா நிறுவனம் செய்வது பாராட்டுதலுக்கு உரியது. தனியே தொழிற்சாலைக்குள் நிகழ்வுகளோடு நிறுத்தாது, தங்களது தொழிற்சாலைக்கு வெளியேயும் திறமையானவர்களை கொண்டு செல்லவும், அவர்கள் மாவட்ட ரீதியில், தேசிய ரீதியில் தங்களது திறமைகளை வெளிக்காட்டவும் தயாராக இருப்பதாகவும் ஒமேகா லைன் நிறுவன முகாமைத்துவம் வி மீடியாவுக்கு தெரிவித்துள்ளது.

தேசிய ரீதியில் நடைபெறுகின்ற பாடகர் தெரிவு போட்டிகள், நடன போட்டிகளில் இந்த போட்டியாளர்களை பங்குபற்ற செய்வதன் மூலம் அவர்கள் தங்களது திறமைகளை மேலும் வெளிக்காட்ட முடியும். தங்கள் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் திறமைகளை வெளிக்காட்டி சாதனைகள் புரிந்தால் அது தமது நிறுவனத்துக்கு பெருமையெனவும், அவ்வாறான திறமையானவர்ளை வெளிக்கொண்டுவர தாங்கள் முழுமையான ஆதரவு வழங்க தயாராக இருப்பதாகவும் ஒமேகா லைன் நிறுவன முகாமைத்துவ உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆடை தொழிற்சாலைகள் பொதுவாக பெண்களிடம் வேலைவாங்குவதையே குறிக்கோளாக இருக்கும் நிலையில்,ஒமேகா லைன், வவுனியா தனது நிறுவன தொழிலார்களின் திறமைகளை வெளிகொண்டுவரவும் ஆதரவு வழங்குவது சிறப்பான விடயம்.

ஒமேகா லைன் வவுனியா தொழிற்ச்சாலை 90 சதவீதம் பெண்களுடன் இயங்கும் தொழிற்சாலை. அவர்ளுக்கு பூரண சுதந்திரம் வழங்கி, அவர்ளுக்கான சலுகைகளை வழங்கி பெண்களை உற்சாகபப்டுத்துகிறது. அவர்களது திறமைகளை வெளிக்காட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்துகிறது. இவ்வாறான தொழிற்சாலைகளில் பெண்கள் வேலை செய்வதன் மூலம் பெண்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்ட முன்னேற நல்ல வாய்ப்பு.

தனியே இவ்வாறான நிகழ்ச்சிகளோடு நிற்காது, தலைமத்து பயிற்சி, அணி முகாமைத்துவ பயிற்சி, தனிமனித முகாமைத்துவ பயிற்சி, போன்ற பல பயிற்சிகளை நடத்துகிறார்கள். தனியே வேலை வாங்கிவிட்டு அனுப்பி வைக்காமல், ஒவ்வொரு பெண்ணையும், ஒவ்வொரு மனிதனையம் அவர்கள் சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக உருவாக்க செயற்படுவது மிகவும் சிறப்பான பணி.

இவ்வாறான நிறுவனத்தில் பெண்கள் இணைந்து கடமையாயாற்றுவதன் மூலம், சமூக, பொருளாதரா முன்னேற்றத்தை பெறுவார்கள் என்பது உறுதி.

சிறந்த பாடகருக்கான போட்டியில் ஐந்தாவது இடத்தினை 6 வது வலயத்தின் கொன்செப்டா பெற்றுக்கொண்டார். அவருக்கான பரிசினை தொழில் நுட்ப பிரிவின் பிரதீபா வழங்கி வைத்தார்.
நான்காவது இடத்தினை 3 ஆவது வலயத்தின் ஷாலினி பெற்றுக்கொண்டார். அவருக்கான பரிசை தயாரிப்பு பிரிவின் தொழில் நுட்ப ஊழியர் ஜஸ்மினா வழங்கி வைத்தார்.

மூன்றாவது இடத்தினை 3 ஆவது வலயத்தின் லோகேஸ்வரி பெற்றுக்கொண்டார். அவருக்கான பரிசிலினை கொள்வனவு பிரிவின் பொறுப்பதிகாரி குமுதினி வழங்கி வைத்தார்.

இரண்டாவது இடத்தினை சங்கீத வெற்றிபெற அவருக்கான பரிசினை களஞ்சிய உதவி முகாமையாளர் சுமன் வழங்கி வைத்தார். முதலாவது இடத்தினை 5 ஆவது வலயத்தின் மயூரி வெற்றி பெற்றார். அவருக்கான பரிசினை மேற்பார்வை பிரிவின் உதவி முகாமையாளர் சத்தியா வழங்கினார். முதலிரு இடங்களை சகோதரிகள் பெற்றுக் கொண்டமை முக்கியமான சம்பவமாக அமைந்தது.

நடன போட்டியில் ஆறாவது இடத்தினை 5 ஆவது வலயத்தின் ஜென்சி, பிரவீனா, அனுஷா, ரதிமாலா இணைந்த குழு வென்றது. அச்சு பகுதியின் அதிகாரி உதயரூபினி இந்த குழுவுக்கான பரிசினை வழங்கி வைத்திருந்தார்.

Bonding பிரிவினர் ஐந்தாவது இடத்தை பெற்றனர். சேனகா, தனுஜா, மதுசியா, ஜனனி ஆகியோர் இணைந்து நடனமாடியிருந்தனர். அந்த குழுவினருக்கு பொறியியியல் பிரிவின் உதவி முகாமையாளர் ரமேஷ் பரிசினை வழங்கினார்.

வெட்டு பிரிவினர் நான்காவது இடத்தினை பெற்றுக் கொண்டனர். தமிழ், செந்தூரன், டின்ஷாந்தன் ஆகியவர்கள் இணைந்து நடமானடியிருந்தனர். நிதியியல் பிரிவின் உதவி முகாமையாளர் பிரவீன் பரிசினை வழங்கி வைத்தார்.

மூன்றாவது இடத்தினை 7 ஆவது வலயத்தை சேர்ந்த ப்ரியந்தி, ஜல்சிகா, அரசகுமாரி,கஜேந்தினி ஆகியோர் இணைத்து ஆடி பெற்றுக் கொண்டனர்.இவர்களுக்கான பரிசினை அச்சு பிரிவு முகாமையாளர் சுமேத வழங்கி வைத்தார்.

தயார்படுத்தல் பிரிவினை சேர்ந்த விந்துஷா, வனிதா, தனுசியா,ஷர்மிளா ஆகியோர் இணைந்து ஆடி இரண்டாமிடத்தினை வெற்றி பெற்றனர். திட்டமிடல் பிரிவின் முகாமையாளர் மௌலி வெற்றி பெற்ற அணிக்கான பரிசினை வழங்கி வைத்தார்.

அச்சு பகுதியின் சங்கீதா, சுகந்தினி, ஜோதினி, ஆன் மெரிஸ்டெல்லா ஆகியோர் இணைந்து முதலிடத்தை வெற்றி பெற்றனர். மனிதவலு, நிர்வாக முகாமையாளர் சமன் ஜயசிங்க வழங்கி வைத்தார்.

அபார திறமையை காட்டிய ஒமேகா லைன், வவுனியா தொழிலார்கள்

இறுதி நிகழ்வின் முகபுத்தக நேரலையினை பார்வையிட கீழுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

https://www.facebook.com/vmediathamil/videos/739409723687226

https://www.facebook.com/vmediathamil/videos/1140108116745100

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version