இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான 20-20 போட்டி நேற்று (20/02) நடைபெற்றது. மூன்று போட்டிகளிலும் இந்தியா அணி தோல்விகளின்றி வெற்றிகளை மாத்திரம் பெற்று தொடரை வென்றுள்ளது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றது. இதில் சூரியகுமார் யாதவ் 65 ஓட்டங்களையும், வெங்கடேஷ் ஐயர் 35 ஓட்டங்களையும் பெற்றனர். இணைப்பாட்டமாக 91 ஓட்டங்களை இவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
பந்துவீச்சில் ரோஸ்டொன் சேஸ், டோமினிக் ட்ரேக்ஸ், ஹெய்ட்ன் வால்ஷ், ஜேசன் ஹோல்டர், ரொமேரியோ ஷீபேர்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
185 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்றது. இதில் நிக்கோலஸ் பூரான் 61ஓட்டங்களையும், ரொமேரியோ ஷீபேர்ட் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஹர்ஷால் படேல் 3 விக்கெட்களையும், தீபக் சஹார், வெங்கடேஷ் ஐயர், ஷர்டுல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இந்தியா அணி 17 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் சூரியகுமார் யாதவ் தெரிவு செய்யப்பட்டார்.
