சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. முன்நாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிரிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இந்தளவு கூட்டமா? என இந்த கூட்டம் தொடர்பில் பலர் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
மக்கள், தேசிய கட்சிகளின் கூட்டங்களுக்கு செல்வார்கள். ஆனால் தமிழ் அரசியல் கட்சிகளோடு ஆதரவாக இருப்பார்கள் என்ற கருத்துக்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மட்டுமே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சயின் மூலமாக வெற்றி பெற்ற உறுப்பினர். அவருக்காக சேர்ந்த கூட்டம் இதுவென்ற பேச்சுகளும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் யாழ் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன “மக்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது எமக்கு தெரியும். நாட்டின் சகல பகுதி மக்களும் இவ்வாறான பிரச்சினைகளை எதிகொள்கின்றனர். நாடு பாரிய பொருளாதர சிக்கலுக்குள் காணப்படுகிறது. விவாசாயிகள் பசளையின்றி சிக்கலில் காணப்படுகின்றனர். இவாறான நிலைமைக்கு கவலையடைகிறோம்” என தெரிவித்தார்.
தான் உலக தலைவர்களோடு நெருக்கமா செயற்பட்டதாகவும், அவர்கள் தனக்கு உதவியதாகவும், அவர்கள் மூலமாக நாட்டை ஆட்சி செய்ததாகவும் தெரிவித்த முன்நாள் ஜனாதிபதி தற்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அப்போது எதிகொள்ளவில்லை என தெரிவித்தார்.
ஊழலற்ற அரசியல்வாதிகளை கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மக்கள் நட்புறவு கட்சியாக தொடர்ந்து செயற்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
