கடவுச் சீட்டு என்பது பெரிய சவால்தான்… நாடு விட்டு நாடு பயணமாகும்போது, துருவித் துருவி கேள்வி கேட்பார்கள்… என்னடா இவன் லண்டனுக்கு போகிறானே என்பது போல, கடவுச் சீட்டை புரட்டி புரட்டிப் பார்ப்பார்கள். சில சமயங்களில் இடக்கு மடக்காக பல கேள்விகளையும் கேட்பார்கள். (எனக்கு சுவிஸ் கடவுச் சீட்டு கிடைத்தபின்பு முழுக் கோலமுமே மாறி விட்டது..)
பயணத்தில் இந்தச் சிக்கல் இருந்தாலும், வெளிநாடுகளில் இலங்கைத் தமிழராக இருப்பவர்கள், சவால்களை எதிர்கொண்டு வாழக் கற்றுள்ளார்கள்..வீடிருப்பவனுக்கு ஒரு வீட்டைக் கட்ட, வாங்க தேடுதல் என்பது இல்லை. ஆனால் வீடில்லாதவன் நிலை வேறு. நாடில்லாதவன் என்ற முறையில் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தவனுக்கு, சவால்களை சமாளிப்பது ,மிகக் கடினமான ஒன்றல்ல.… நல்ல உழைப்பாளிகள் , மொழியைக் கற்கும் ஆர்வமுள்ளவர்கள், நேர்மையானவர்கள், பொறுப்பானவர்கள் என்று ஐரோப்பிய நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் பெயர் எடுத்திருப்பதன் காரணம் இதுதான்..அங்கு மொழியைப் படித்து, ஒரு கடையையும் திறந்து, ஒரு முதலாளியாக செயற்படுவது, பெருஞ் சவால்கள் நிறைந்தது.. நான் பயணஞ் செய்த ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளிலெல்லாம் பல கடின உழைப்பாளிகளைச் சந்தித்து மனம் பூரித்தேன்….