அரச வங்கிகளில் அரசியல் ரீதியான முடிவுகளினால் மக்களுக்கு பாதிப்பு

தற்போதைய அரசாங்கத்தின், அரச நிதிக் கொள்கைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அரசியல் ரீதியான முடிவுகளினால் மக்களின் அன்றாட வாழ்விற்கு ஏராளமான எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் இன்று(02.03) தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளில் காணப்படும் பற்றாக்குறைக்கும் குறித்த முடிவுகள் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதற்கு அடிப்படைக் காரணமாக அமைவது அரசாங்கத்தின் இறக்குமதிக் கொள்கையும் அதே போன்று செயற்கையான முறையில் ரூபாயின் பெறுமதியை பேணிச் செல்ல மேற்கொள்ளப்படுகின்ற முயற்சியுமாகுமென இலங்கை வங்கி ஊழியர் சங்க தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிக்கல்கள் காணப்படுகின்ற இவ்வாறான சந்தர்ப்பங்களில் இறக்குமதியை தேவையின் அடிப்படையில் வரிசைப்படுத்துவதனை விடுத்து திடீரென்று ஏற்படுகின்ற தேவைகளின் அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்துவதனால் தற்போது பற்றாக்குறையுடன் காணப்படுகின்ற அந்நிய செலாவாணி பற்றாக்குறைக்கும் அதே போன்று ரூபாயின் பற்றாக்குறைக்கும் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

முக்கியமாக வெளிநாட்டு பண ஒதுக்கங்களை பேணிச் செல்லும் அரச வங்கிகளின் ஒதுக்கங்கள் இந்நடவடிக்கையின் ஊடாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன், ரூபாயின் பெறுமதியை செயற்கையான முறையில் நிலையாக வைத்துக் கொள்ள மேற்கொள்ளப்படுகின்ற முயற்சியினால் வெளிநாட்டு தீர்பனவுகளும் நேரடியான வெளிநாட்டு முதலீடுகளும் பற்றாக்குறையுடனான நிலைமைக்கு உள்ளாகியுள்ளன என்றும் அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அரச வங்கிகளில் அரசியல் ரீதியான முடிவுகளினால் மக்களுக்கு பாதிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version