சமையல் எரிவாயு தட்டுப்பாடு இலங்கையில் நிலவி வருகின்றன நிலையில் இன்றைய தினம் லிட்ரோ சமையல் எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பித்துள்ளன.
கெரவலபிட்டிய கப்பல் இறங்கு துறையில் 2500 மெற்றிக் தொன் லிட்ரோ சமையல் எரிவாயு இறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை பூராகவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் நிலையில் பல உணவகங்கள், பேக்கரிகள் பூட்டப்பட்டுள்ளன.
எரிவாயு இறக்கப்படும் பணிகள் பூர்த்தியானதும் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கபப்டுகிறது. இருப்பினும் லிட்ரோ நிறுவனம் எரிவாயு விநியோகம் ஆரம்பிப்பது தொடர்பில் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
கொழும்பின் நகர் பகுதிகளும் எரிவாயு இல்லாமையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கும் நிலையில் எரிவாயு தட்டுப்பாடு குறைவையுமென நம்பப்படுகிறது.
