இன்று நள்ளிரவு முதல் 367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு தடை செய்யும் வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது. உரிய இறக்குமதிக்கான அனுமதி பத்திரம் இருந்தால் மட்டுமே அந்த பொருட்களினை இறக்குமதி செய்ய முடியுமெனவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இந்த வார்த்தமானி வெளியிடவுள்ளது.
பால் தயாரிப்புகள், மீன் தயாரிப்புகள், தயிர் மற்றும் யோகட் தயாரிப்புகள், கொழுப்பு சம்மந்தப்பட்ட தயாரிப்புகள், பட்டர், சீஸ், அப்பிள், கிரேப்ஸ், பியேர்ஸ், சொக்கலேட் வகைகள், கொய்யாப்பழம், மாம்பழம், அன்னாசி பழம், பேரீச்சம்பழம், ஓட்ஸ் வகைகள், பஸ்டா, பழரசங்கள், தண்ணீர் வகைகள் என ஏராளமான பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 10 ஆம் திகதி வரை பணம் செலுத்தி பற்று சீட்டு பெறப்பட்ட பொருட்கள் இறக்குமதி செய்ய முடியுமெனவும், அதற்கு பின்னர் அவை இறக்குமதி செய்ய முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யாமல் இவ்வாறான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக அரசாங்கம் மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வந்தன. அண்மையில் அமைச்சு பதவி நீக்கப்பட்ட உதய கம்மன்பிலவும் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
