இலங்கையின் தனியார் வர்த்தக வங்கிகள் 260 ரூபாவுக்கு டொலரினை விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 250 ரூபவாக கொள்வனவு விலையினை வங்கிகள் அறிவித்துள்ளன.
இலங்கை ரூபாவின் புரள்வை அதிகரிக்க செய்யுமாறும், நெகிழ்வு தன்மையான பணப் பெறுமதியினை டொலருக்கு வழங்க முடியுமென்ற அறிவிப்பினை மத்திய வங்கி கடந்த 07 ஆம் திகதி வங்கிகளுக்கு அறிவித்திருந்தது. டொலருக்கான அதிகபட்ச விற்பனை பெறுமதியாக 230 ரூபாவாக அறிவிப்பு செய்திருந்தது.
வளர்ந்து வரும் நுண் பொருளாதாரம் மற்றும் நிதிச் சந்தை முன்னேற்றங்களைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், உலகளவிலும் உள்நாட்டிலும் ஏற்படும் பணவீக்கம், வெளித் துறைகளின் ஸ்திரத்தன்மை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு பொருளாதார முன்னேற்றம் பணப்புரளவு தொடர்பில் உன்னிப்பாக கவனிப்பதாகவும் வங்கிகள் தெரிவித்துள்ளன.