எரிபொருள் நாட்டுக்கு சீராக தற்போது வருகை தர ஆரமித்துள்ளமையினால் எரிபொருள் தட்டுப்பாடு குறைவடைந்துள்ளது. ஆனாலும் மக்கள் வரிசையில் நிற்பது இன்னமும் குறைவடையவில்லை. இந்த நிலையில் எரிபொருள் காவி தாங்கி உரிமையாளர் சங்கம் தாம் எரிபொருட்களை எடுத்து செல்வதை இடை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுளளதாக அறிவித்துள்ளனர்.
இரண்டு தினங்களுக்குள் தாம் கோரிய 60 சதவீத கட்டண அதிகரிப்பை வழங்காவிட்டால் எரிபொருள் விநியோகத்திலுருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளனர். 800 எரிபொருள் காவி தாங்கிகள் சேவையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ள அந்த சங்கம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வெறும் 80 அளவிலான எரிபொருள் காவி தாங்கிகளே உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
திடீரென அதிகரித்துள்ள எரிபொருள் விலையேற்றம், ஒயில் விலையேற்றம், டயர் விலையேற்றம், உதிரிப்பாக விலையேற்றம், பராமரிப்பு செலவு, சம்மபள உயர்வு ஆகியன காரணமாக தங்களது செலவுகள் அதிகரித்துள்ளமையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விலை சூத்திரத்தினை மாற்றி உடனடியாக 60 சதவீத உயர்வை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் தமக்கே எரிபொருள் கிடைப்பது கடினமாகவுள்ளதாகம் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 90 சதவீதமான உரிமையாளர்கள் விநியோகத்திலிருந்து விலகும் முடிவிலிருப்பதாகவும், இரண்டு தினங்களுக்கு சேவைகளை நிறுத்தாமல் தொடருமாறும் தாம் அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.