புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்படும்

புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் புகையிரத கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாகவும் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் எரிபொருள் விலையேறிய போதும் புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என்பதனையும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

விரைவில் அதிரிக்கப்பட்ட புகையிரத கட்டணங்கள் அறிவிக்கப்படுமென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்படும்

Social Share

Leave a Reply