ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த கூட்டம் மீண்டும் ஒரு தடவை பிற்போடப்பட்டுள்ளது. இன்றைய தினம் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்திப்பதனாலும், ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி கொழும்பில் நடைபெறுவதனாலும் இந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஒரு வருட காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்ட போதும் பலவேறு காரணங்களினால் இந்த சந்திப்பு பிற்போடப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி ஒவ்வொரு காரணங்களை கூறி தம்மை சந்திப்பதனை தவிர்த்து வருவதாக ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
