நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று மாலை இந்தியா பயணமாகியுள்ளார். இலங்கைக்கான பொருளாதர மேம்படுத்தலில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பிலும், இலங்கைக்கான 500 மில்லியன் டொலர்களுக்கான எரிபொருள் கடன், 1 பில்லியன் டொலர் உணவு பொருட்களுக்கான கடன் ஆகியவற்றவை பெற்றுக் கொள்ளுதல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துடவதற்கா சென்றுள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் திறைசேரியின் செயலாளர் ஆட்டிக்கலவும் இந்தியா பயணமாகியுள்ளார். ஏற்கனவே இரண்டு தடவைகள் பசில் ராஜபக்ஷ இந்தியா செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் இந்திய தரப்பினால் சந்திப்புகள் இரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் இந்திய வெளியுறவு துறை அமைச்சருடன் தொலைபேசியில் பேசியதனை தொடர்ந்து மீண்டும் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பசில் ராஜபக்ஷ இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்களை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சந்திக்கவுள்ளார்.