மத்திய வங்கி ஆளுநர் பதவி சிக்கல்?

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அந்த பதவியிலுருந்து விலக ஜனாதிபதி கூறியதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லையென மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

தனக்கு அவ்வாறான அறிவுறுத்தல்கள் எதுவும் இதுவரையும் கிடைக்கவில்லையென தெரிவித்த்துள்ள கப்ரால் அவ்வாறான செய்திகளில் உண்மையில்லை எனவும் வதந்தி எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நித்தியத்துடனான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் தடுத்து வருவதாகவும், சர்வதேச நாணய நிதியத்துடன் கடன்களை வழங்குவதில் உள்ள சிக்கல்களை பேசுவதறகு தடுத்து வருவதாகவும், பொருளாதர சிக்கல்களை ஏற்படுத்தியமைக்காகவும் அஜித் நிவாட் கப்ராளை அந்த பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்ததாக குறித்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய பிரதிநிதிகள் இலங்கை வருவது கடன்களை மீள சீர்செய்வது தொடர்பாக பேசுவதற்கல்ல என மத்திய வங்கி ஆளுநர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். ஆனாலும் அது தொடர்பில் பேசப்பட்டதாக அறிய முடிகிறது. அத்தோடு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு பெறப்படுமென ஜனாதிபதியின் நேற்றைய உரையில் தெரிவித்திருந்தார்.

அண்மைக்கால நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கும், மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் சீரான உறவில்லையென அந்த ஊடகம் தனது ஊகத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஊகங்கள் வதந்திகள் உண்மையாகும் வாய்ப்புகள் இல்லாமலும் இல்லை. தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்துவிட்டு மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவியினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மத்திய வங்கி ஆளுநர் பதவி சிக்கல்?

Social Share

Leave a Reply