இலங்கைக்கு டொலரினை அனுப்ப மாட்டோம் என இத்தாலியில் உள்ள “மாற்றத்துக்கான இலங்கை புலம்பெயர்ந்தோர்” அமைப்பு தெரிவரித்ததுள்ளது. இலங்கையை ஆட்சி செய்யும் கடந்த கால அரசாங்கம், தற்போதைய அரசாங்கம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பாமை, சுற்றுலா துறை வீழ்ச்சி என அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் அது உண்மையல்ல என தெரித்துள்ள அந்த அமைப்பு வீடு திரும்பிய உறவினர்களை நீண்ட வரிசையில் நின்று இருளில் தவிக்கும் நிலைக்குத் தள்ளியது தற்போதைய ஆட்சியாளர்கள்தான். இப்போது தேசத்தை ஆளும் ஊழல் அரசியல்வாதிகளும், கடந்த காலத்தில் ஆட்சி செய்தவர்களும்தான் நமது ரத்தத்தையும் வியர்வையும் வீணடித்து கொள்ளையடித்தவர்கள் என குற்றம் சுமத்தியுள்ளது.
ஊழலற்ற அரசாங்கம் அமையும் வரை வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களாகிய நாங்கள் இலங்கைக்கு டொலர்கள் எதனையும் அனுப்புவதில்லை என தீர்மானித்துள்ளோம்” என மாற்றத்திற்கான இலங்கை புலம்பெயர்ந்தோர் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவாறான காரணங்களை தெரிவிப்பது இயலாமையின் வெளிப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் போனது. பிரச்சினையைத் தீர்க்க அர்த்தமுள்ள மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்” எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்ஜனாதிபதி மக்களுக்கு ஆற்றிய உரையின் பின்னர் தமது அறிக்கையினை வெளியிட்டுள்ள இத்தாலியின் மாற்றத்துக்கான இலங்கை புலம்பெயர்ந்தோர் அமைப்பு “பல நாடுகள் கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் பொருளாதாரத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்த முடிந்ததுள்ளது. அனால் இலங்கையின் தற்போதைய ஆபத்தான பொருளாதார நெருக்கடிக்கு தொற்றுநோய் மற்றும் உக்ரைன்-ரஷ்யா போரைக் குற்றம் சாட்டுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளது.