ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இவ்வருடம் ஆவணி மாதம் 28 ஆம் திகதி முதல் புரட்டாதி மாதம் 11 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் சம்மேளன கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவணி 20 ஆம் திகதி முதல் தெரிவுகாண் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இன்றைய தினம் கொழும்பில் ஆசிய கிரிக்கெட் சம்மேளன பொதுக் கூட்டம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு சபையின் செயலாளரும், ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவருமான ஜய் ஷா தலைமையில் நடைபெற்றது.
நான்கு வருடங்களின் பின்னர் ஆசிய கிண்ணம் நடைபெறவுள்ளது. இலங்கை இம்முறை ஆசிய கிண்ணத்தினை நடாத்துகிறது.
ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் நடைமுறை நிர்வாகம் 2024 ஆம் ஆண்டு வரை தொடர்வதாகவும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
