இலங்கையில் சந்தோசமாக வாழ முடியாது?

இலங்கை சந்தோசமாக வாழ முடியுமான நாடுகளின் பட்டியலில் 127 ஆம் இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது. 146 நாடுகளில் செய்யபப்ட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகளின் அனுசரணையில் நடைபெற்ற இந்த ஆய்வு கடந்த 18 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. 20 ஆம் திகதியான இன்று உலக சந்தோச தினம். இதனை முன்னிட்டு இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

பின்லாந்து ஐந்தவாது வருடமாக முதலிடத்தை தக்க வைத்துள்ளது. டென்மார்க் இரண்டாமிடத்தையும், ஐஸ்லாந்து மூன்றாமிடத்தையும் பெற்றுள்ள அதேவேளை சுவிற்சலாந்து நான்காமிடத்தையும், நெதர்லாந்து, லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகள் அடுத்த இரண்டு இடங்களையும், நோர்வே, இஸ்ரேல், நியூசிலாந்து ஆகிய நாடுகள் அடுத்த மூன்று இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளன.

கனடா பாரிய வீழ்ச்சி ஒன்றை காட்டியுள்ளது. 10 இடங்கள் பின் சென்று 15 ஆம் இடத்திலும், அமெரிக்கா பதினாறாவது இடத்திலும், பிரித்தானிய 17 ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

எமது அண்டைய நாடான இந்தியா இலங்கைக்கு பின்னதாக 136 ஆவது இடத்தில் காணப்படுகிறது. பங்களாதேஷ் 94 ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 121 ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் சந்தோசமாக வாழ முடியாது?
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version