சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிக்கிறது தமிழ் முற்போக்கு கூட்டணி

ஜனாதியாதியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்து கொள்ளாதென அறிவிக்கபட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

பொருளாதார துறையில் மட்டுமல்லாது, பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக நம் நாடு அரசியல், சமூக, கலாச்சார துறைகள் உள்ளிட்ட சகல துறைகளிலும் அதல பாதாளத்தில் விழுந்துள்ள பின்னணியில், சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை கவனமாக பரிசீலித்து, இம்மாநாட்டில் கலந்துக்கொள்வதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தோல்வியை எதிரணியின் தலைகளில் சுமத்துவதற்கான முயற்சியாகவும், அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை திருப்தி படுத்தவும் அரசாங்கம் செய்யும் முயற்சியாகவும், இந்த அழைப்பை, பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சியாக நாம் கணிக்கிறோம் என மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிக்கிறது தமிழ் முற்போக்கு கூட்டணி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version