சீனாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற விமான விபத்தில், பயணித்த 132 பயணிகளும் உயிரிழந்திருக்கலாமென நம்பப்படுகிறது. தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்ற போதும் இதுவரையில் எவரும் உயிரோடு கன்டுபிடிக்கப்படவில்லை. சில உடல்கள் கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விமானத்தின் எரிந்த மீத பகுதிகள், பயண பைகள், ஆளடையாள அட்டைகள், பேர்ஸ் போன்ற பயணித்தவர்களது உடைமைகள் சிலவும் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளன.
விமானம் கிட்டத்தட்ட 30,000 அடியிலிருத்து வீழ்ந்திருக்கலாமென்ற சந்தேகம் நிலவுகிறது. விமானம் தலைகீழாக விழும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. மலைப்பகுதியில் வீழ்ந்து வெடித்து எரிந்துள்ளது என்றே நம்பப்படுகிறது.
விமானம் வீழ்ந்தமைக்கான காரணம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.சீனாவின் கும்மிங் பகுதியிலிருத்து, குவாங்ஷோ பகுதிக்கு பயணித்த விமானம் பயணத்தை ஆர்மபித்து 1 1/2 மணி நேரத்தில் வுஷாப் என்ற பகுதியில் மலைக்கு மேலே வீழ்ந்து வெடித்துள்ளது.