எதிர்வரும் சித்திரை/தமிழ் புது வருடத்துக்கு மக்களுக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்க முடியுமென நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்றைய சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க உட்பட பலர் மாற்றம் செய்து புதிய வரவு செலவு திட்டத்தை முன் வைக்குமாறு தங்களது கருத்துக்களை முன் வைத்திருந்தனர். அத்தோடு தேவையற்ற அபிவிருத்தி நிதி ஒதுக்கீடுகளை நீக்குமாறும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
புதிய வரவு செலவு திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கினால் நிதியமைச்சர் என்ற ரீதியில் உடனடியாக வரவு செலவு திட்டத்தை மாற்றியமைத்து சமர்ப்பிக்க முடியுமெனவும், அவ்வாறு செய்தால் அந்த வரவு செலவு திட்டத்தில் புதுவருட விசேட கொடுப்பனவினை மக்களுக்கு வழங்கு முடியுமென நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.