கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4.9 Kg ஐஸ் ரக போதை பொருட்களை வைத்திருந்தமைக்காக இருவரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
41 வயது 43 வயதான மன்னார் மற்றும் வவுனியாவை வசிப்பிடமாக கொண்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
