ஏப்ரல் மாதம் முதல் சீரான எரிபொருள் விநியோகம் இருக்குமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் ஜெயசிங்க இன்று தெரிவித்துள்ளார். கடந்த வருடங்களிலும் பார்க்க இந்த வருட முதல் மூன்று மாதங்களில் டீசல் மற்றும் எரிபொருள் பாவனை அதிகரித்தமை இந்த தட்டுப்பாட்டுக்கான காரணமென தெரிவித்த அதேவேளை அதிகரித்துள்ள எரிபொருள் விலையும் காரணமென தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் 2.5 பில்லியன் டொலர்கள் எரிபொருள் கொள்வனவுக்காக பாவிக்கப்பட்டதாகவும், இந்தவருட முதல் மூன்று மாதங்களில் 1.2 பில்லியன் டொலர்களுக்கு எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும். இன்னமும் 5 பில்லியன் டொலர்கள் எரிபொருள் கொள்வனவுக்காக தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
25 மில்லியன் டொலர்கள் கடந்த காலங்களின் ஒரு கப்பல் எரிபொருளுக்காக தேவைப்பட்டதாகவும், தற்போது 45-50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்த பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர், கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் 139,000 மெற்றிக் தொன் பாவனையாக காணப்பட்ட எரிபொருள் பாவனை, இந்த வருடம் ஜனவரி மாதம் 198,000 மெற்றிக் தொன்னாக உயர்ந்துள்ளதாகவும், மார்ச் மாதத்தில் 211,000 மெற்றிக் தொன்னாகா உயர்ந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த வருட ஜனவரி மாதத்தையும், இவ்வருட ஜனவரி மாதத்தையும் எரிபொருள் பாவனையளவில் ஒப்பிடுவது பாரிய முகாமைத்துவ தவறாக கருதலாம். மிக மோசன கொரோனா காலகட்டத்தில் கடந்த வருட ஜனவரி மாதம் காணப்பட்டது. போக்குவரத்தது தடைகள் காணப்பட்டன. அப்போது எரிபொருள் பாவனை மிக குறைவு. இந்த வருடம் சகல துறைகளும் மீள ஆரம்பித்துள்ளன. எனவே எரிபொருள் பாவனை கடுமையாக அதிகரிக்கும்.
அத்ததோடு கடுமையான எரிபொருல் தட்டுப்பாட்டுக்கு மத்தியில், வரிசை காணப்படும் நிலையிலும்
211,000 மெற்றிக் தொன் பாவனை இம்மாதத்தில் அதிகரித்துள்ளது என்பது எரிபொருளுக்கு என்ன நடைபெற்றது என்பது தொடர்பில் கேள்வியெழுகிறது. ஆக எரிபொருள் வந்துருக்கிறது. மக்கள் கொள்வனவு செய்துள்ளார்கள். அப்போது எவ்வாறு தட்டுப்பாடு?
35 சதவீதத்தால் இந்த வருடத்தின் மூன்று மாதங்களுக்கான எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் சுமித் ஜெயசிங்க கூறியுள்ளார்.
