அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகியுள்ளதாக அறிவித்துள்ளது.
நாளைய(05.04) பாராளுமன்ற அமர்வில் தமது 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.
சுதந்திர கட்சியின் இராஜாங்க அமைச்சர்கள், துமிந்த திஸ்ஸாநாயக்க, லசந்த அலகியவன்ன ஆகியோர் தமதுபதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். ஏற்கனவே இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தனது இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விலகல் காரணமாக ஆளும் பொதுஜன பெரமுன 2/3 பெருன்மான்யை பாராளுமன்றத்தில் இழக்கவுள்ளது.