ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி கட்சிகள் ஜனாதிபதி அழைப்பை நிராகரிப்பு – மனோ

ஐக்கிய மக்கள் சக்த்தியின் கூட்டணி கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட தேசிய அரசாங்க அமைச்சரவை அழைப்பை நிராகரிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வி மீடியாவுக்கு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியி, தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஜனாதிபதியின் இந்த அழைப்பை முழுமையாக புறக்கணிப்பதாகவும், நீண்டகால, குறுங்கால எந்த ஆட்சிகளிலும் பங்கெடுப்பது தொடர்பில் சிந்தித்து பார்ப்பது கூடவில்லையென முடிவெடுத்துள்ளதாகவும் மனோ MP தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று(04.04) நடைபெற்றதாகவும், அதன்போது இந்த விடயங்கள் பேசப்பட்டதாகவும்  தெரிவித்த மனோ கணேசன், நாளைய தினம் பாராளுமன்ற அமர்வு எதிர்கட்சியினரால் முடக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி இன்று காலை சகல கட்சிகளுக்கும் இடைக்கால அமைச்சரவை அமைப்பதில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும் ஆளும் கூட்டணியிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, இன்று தாம் அரசிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. ஜே.வி.பி அழைப்பை மறுத்து ஜனாதிபதி பதவி விலகவேண்டுமென அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி தாம் நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் தாம் அந்த அழைப்பை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி கட்சிகள் ஜனாதிபதி அழைப்பை நிராகரிப்பு - மனோ
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version