பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களை காட்டி பெரும்பான்மையினை நிரூபிப்பவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ. ஆட்சியினை வழங்க தயாராகவுள்ளதாக முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தற்போதைய நிலவரப்பபடி ஆளும் பொதுஜன பெரமுன கட்சி பெரும்பாண்மை பலத்துடன் காணபப்டுகிறது. பொதுஜன பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான நிமல் லன்சாவின் கருத்தின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிலிருந்து விலகி சுயாதீனமாக அமரவுள்ளதாக கூறியுள்ளார். அவ்வாறான நிலை ஏற்படும் பட்சத்தில் எந்த கட்சியும் 113 ஆசனங்களுடன் பெரும்பான்மையாக காணப்படாது.
ஆகவே தொங்கு பாராளுமன்ற நிலை ஏற்படும். எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தபோதைக்கு ஆட்சியினை அமைக்கும் எந்த திட்டத்துடனும் இருப்பதாகவும் தெரியவில்லை. ஆகவே இழுபறி நிலை தொடர் கதையாகவே செல்லும். ஜனாதிபதி தனது பதவியில் தொடருவார்.
இந்த நிலையில் நாளைய(05.04) பாராளுமன்ற அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது. நாளைய தினம் அவசரகால சட்டத்துக்கான வாக்களிப்பும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்களிப்பு நடாத்தப்படவேண்டும். பாரளுவமன்றத்தில் அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அவசரகால சட்டத்தை தொடர்ந்து கொண்டு செல்ல முடியும்.