சேர்ந்து போராடுங்கள். தமிழர் பிரச்சினையை முன்வையுங்கள் – மனோ

அரச எதிர்ப்பு போராட்டங்களில் சிங்கள மக்களோடு சேர்ந்து அவர்களது கோஷங்களை எழுப்பவதோடு நின்றுவிடாது தமிழராகிய எங்களுக்கான பிரச்சினைகள் தொடர்பிலும் வலியுறுத்த வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தமிழ் பேசும் போராட்டகாரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தனது சமூக வலை பக்கத்தினூடக “அரசு எதிர்ப்பு போராட்டங்களில் ஈழத்தமிழ், மலையக, முஸ்லிம் மக்கள் குறிப்பாக இளைஞர்கள், எமது இன மக்கள் எதிர்நோக்கும் விசேட பிரச்சினைகளையும் வலியுறுத்த வேண்டும். தென்னிலங்கை சிங்கள மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கோஷங்களை எழுப்பி, அரசை எதிர்த்து போராடுகிறார்கள். ஆகவே நாமும் போராடுவோம் என அவர்கள் எழுப்பும் அதே கோஷங்களை மாத்திரம் எழுப்பி போராடுவது உசிதமானதல்ல” என தெரிவித்துள்ளார்.

“கோதாபய உட்பட அனைத்து ராஜபக்சர்களும் வெளியேற வேண்டும் என்பதில் எவரையும்விட நாம் மிக உறுதியாக இருக்கிறோம். அதேபோல், ராஜபக்சர்கள் வெளியேறுவதால் மாத்திரம், தமிழ் பேசும் மக்களின் எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து, நமது வீடுகளிலும், நகரங்களிலும், கிராமங்களிலும் பாலுந்தேனும் ஓடப்போவதில்லை என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன்” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் MP மேலும் கூறியுள்ளார்.

சேர்ந்து போராடுங்கள். தமிழர் பிரச்சினையை முன்வையுங்கள் - மனோ
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version