புதிய மத்திய வங்கி ஆளுநர் நாட்டை வந்தடைந்தார்

மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்கவுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்துள்ளார். நாளையதினம் இவர் இலங்கை வங்கியின் ஆளுநர் பதவியினை பொறுப்பேற்பார் என நம்பப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் உதவி ஆணையாளராக 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடமையாற்றியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் மேலதிக பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ள இவர் உயர் மதிப்புள்ள பொருளாதர நிபுணர் என தெரிவிக்கப்படுகிறது.

களனி பலக்லைக்கழகத்தின் பட்டம் பெற்ற இவர் பொருளாதர பட்டத்தினை அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழத்தில் நிறைவு செய்து முதுகலை பட்டத்தை பெற்றுள்ளார்.

புதிய மத்திய வங்கி ஆளுநர் நாட்டை வந்தடைந்தார்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version